Thursday 19 September 2013

தாயகத் தமிழ் மக்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்!


பல்வேறு வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தேர்தலொன்றுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் த மிழ் பேசும் மக்களே!
பலரும் சிலாகிப்பது போன்று அதிகாரமில்லாத ஒரு மாகாணசபைக்கான தேர்தல் தமிழ் மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்தத் தேர்தல் சாதாரணமான ஒரு சுழலில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் இது வெறும் உப்புச் சப்பற்ற தேர்தலாகவே அமைந்திருக்கும்.

ஆனாலும் இந்த வட மாகாண சபைத் தேர்தல் அப்படியல்ல. முதல்லி இநந்தத் தே;தலே மகிந்த மற்றும் பரிவாரங்களுக்கு உவப்பானதல்ல. அதனால் தான் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு வரிந்து கட்டிக் கொண்டு நின்ற மகிந்த கூட்டம் வட மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது.

தொடர் சர்வதேச அழுத்தங்களினால் தான் இறுதியில் வடக்கு மாகாணத் தேர்தலை நடத்துவதற்கு முன்வந்துள்ளது.

இந்த நிலையில் வடக்கு மக்கள் தம் பக்கம் உள்ளனர் என்று சர்வதேசத்திற்குச் சொல்வதற்காக இந்தத் தேர்தலில் தனது முழுமையான பதவி, பண, அதிகார, இராணுவ பலத்தையும் பயன்படுத்தக் கங்கணம் கட்டி நிற்கிறது.

தேர்தலில் வெற்றி பெறுவது இயலாதது என்பதை அரசாங்கம் அறிந்திருந்தாலும் கணிசமான இடங்களைக் கைப்பற்றுவதன் மூலம் தாமும் வடக்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர் என்ற செய்தியை சொல்ல அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கிறது. இதற்கு தமிழர்கள் சிலரும் நிற்கின்றனர்.

ஆனாலும் தமிழ் மக்கள் தமது உரிமைகளில் பெறுவதில் உறுதியாகவே இருக்கின்றனர் என்ற செய்தியைச் சர்வதேசத்திற்குச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனை எமது வாக்குச் சீட்டுக்களின் துணை கொண்டு செய்ய வேண்டியுள்ளது.

இந்த இடத்தில ;தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் சில விமர்சனங்கள் இருப்பதும் உண்மை தான். ஆனாலும் இந்த விமர்சனங்களிற்கு அப்பால் தமிழ் Nதுசியக் கூட்டமைப்பிலுள்ள Nதுசியத்தினக் பால் பற்றுள்ள பலரும் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ் தேசியத்தின் பால் உறுதியாகவுள்ள விலைபோகாத பிரதிநிதிகளை தெரிவு செய்வதன் ?லம் சிங்கள அரசுக்கு மட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஒரு திடமான முடிவினைத் தமிழ் மக்கள் சொல்ல முடியும்.

எனவே எதிர்வரும் சனிக்கிழமை காலi வேளையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கும் அதில் இடம்பெற்றுள்ள தமிழ் தேசியத்தில் உறுதி கொண்ட உண்மைத் தொண்டர்களுக்கும் வாக்குக்களை அளித்து சிங்கள்தின் சர்வதேச ரீதியலான பொய்ப் பிரஒரு பதிலடியைக் கொடுக்க அனத்துத் தமிழர்களும் உறுதியெடுப்போம்.

No comments:

Post a Comment