Friday 20 September 2013

டெண்டுல்கார் சிற்நத வீரர் என்பது பச்சைப் பொய்…..

இந்த தசாப்தத்தின் சீறந்த வீரர் யார் என்றதுமே பலரது நினைவில் வருபவர் சச்சின் தெந்துல்கார் தான். அதற்குக் காரணம் இன்றைக்கு கிறிக்கெற் உலகில் தனது பணபலத்தாலும் ஊடக பலத்தாலும் கட்டுக்குள் வைத்திருக்கின்ற இந்திய கிறிக்கெற் அதிகார மையம் தான் என்பது இந்தப் பதிவை முழுமையாகப் படிக்கின்ற போது உங்களுக்குப் புரியும்.

சச்சின் தெந்துல்கர் தன்னுடைய துடுப்பாட்டத்தால் இந்திய துடுப்பாட்டத்தை கிட்டத்தட்ட இருபத்தைந்தாண்டுகளாகத்  தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஓரளவில் ஏற்றுக் கொண்டாலும் அவரே உலகின் தலைசிறந்த வீரர் என்பதில் உண்மையிருப்பதாகத் தெரியவில்லை.

புள்ளிவிபரங்களின் துணைகொண்டு இது குறித்து ஆராய்வதற்கு முன்பதாக பொதுவான சில விடயங்கள் குறித்தும் கருத்தில் எடுக்க வேண்டியுள்ளது. 

துடுப்பாட்ட புள்ளிவிபரத்தில் பல சாதனைகளைப் புரிந்த ஒருவராக சச்சின் இருந்தாலும் அணியின் வெற்றியில் அவரது பங்களிப்பு என்பது குறித்த சந்தேகம் நிலவத் தான் செய்கிறது. குறிப்பாக உண்மையான திறமையை வெளிக்காட்டும் கிறிக்கெற் பொட்டி வகை எனக் கருதப்படும் டெஸ்ட் கிறிக்கெற் போட்டிகளில் தனியொருவராக இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த ஒரு போட்டியைக் கூட என்னால் உடனடியாக நினைவில் கொள்ள முடியவில்லை. (நான் தவறாக இருப்பின் வாசகர்கள் திருத்திக் கொள்ள உதவுங்கள்).

அது மட்டுமன்றி ஒருநாள் போட்டிகளில் கூட சச்சின் ஐம்பது சதங்களை அண்மித்திருந்தாலும் அவற்றில் தனியொருவராக அணியை வெற்றிக்கு அழைத்து வந்த போட்டிகள் மிக மிகக் குறைவு. சார்ஜாவில் இடம்பெற்ற ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக அடுத்தடுத்து அடித்த இரண்டு சதங்கள் மட்டும் என் நினைவில் உடனடியாக வருகிறது.

ஆனால் இதே காலப்பகுதியில் சச்சினை விடச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற ஒரு வீரர் பெரும் ஆர்ப்பாட்டங்களோ அலட்டலோ இன்றி தொடர்ந்து அசத்தி வருகிறார்.  அவர் வேறு யருமல்ல. தென்னாபிரிக்க அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜக் காலிஸ் தான் இந்தச் சாதனையாளர்.

இதிலே பலருக்கும் ஆச்சரியமளிக்கக் கூடிய விடயம் என்னவென்றால் பொதுவான் ஆட்டக்காரராக அன்றி துடுப்பாட்டத்தை மட்டுமே கருத்தில் கொண்டாலும் காலிஸே முன்னணியில் திகழுகின்றார்.

டெஸ்ட் போட்டிகளில் இருவருடைய துடுப்பாட்டப் புள்ளிவிபரத்தையும் பாருங்கள்.

சச்சின்
Mat
Inns
NO
Runs
HS
Ave
BF
SR
100
50
4s
6s
Ct
St
Tests
198
327
33
15837
248*
53.86
51
67
69
115
0

காலிஸ்
Tests
162
274
40
13128
224
56.10
28486
46.08
44
58
1469
97
194
0


சச்சின் தெந்துல்கார் 198 போட்டிகளில் 15837 ஓட்டங்களை 53.86 என்ற சராசரியுடன் பெற்றிருக்கின்ற அதே நேரத்தில் 162 போட்டிகளில் மட்டுமே விளையாடி 13128 ஓட்டங்களை 56.10 என்ற சராசரியுடன் காலிஸ் பெற்றிருக்கின்றார்.


துடுப்பாட்டத்திற்கு அப்பால் 224 டெஸ்ட் விக்கெற்றுகளை தனது வேகப் பந்து வீச்சின் மூலம் கைப்பற்றியு;ள்ள காலஜஸ் ஒரு நம்பிக்கைக்குரிய பந்து வீச்சாளராக மட்டுமன்றி சிலிப் பகுதியீல் ஒரு மிகச் சிற்ந்த பிடியாளராகவும் இருக்கிறார். இதுவரை அவர் 194 பிடிகளையும் டெஸ்ட் போட்டிகளில் எடுத்திருக்கிறார்.

ஆனால் சச்சின் தெந்துல்கார் 45 விக்கெற்றுக்களை மட்டுமெ கைப்பற்றியு;ள்ளதுடன் 115 பிடிகளையும் எடுத்துள்ளார்.


சரி! டெஸ்ட் போட்டிகளில் எப்படியிருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் சச்சின் தனக்கு நிகர் இல்லாதவர் என்று சச்சீன் பிரியர்கள் உங்களுக்குள் சொல்லிக கொள்வது கேட்கிறது.

உண்மை என்னவென்றால் அங்கேயும் காலிஸ் சச்சின் தெந்துல்கரை விட முன்னணியிலேயே உள்ளார். இதோ புள்ளிவிபரங்களைப் பாருங்கள்

சச்சின்
Mat
Inns
NO
Runs
HS
Ave
BF
SR
100
50
4s
6s
Ct
St
ODIs
463
452
41
18426
200*
44.83
21367
86.23
49
96
2016
195
140
0

காலிஸ்
  Mat
Inns
NO
Runs
HS
Ave
BF
SR
100
50
4s
6s
Ct
St

ODIs
321
307
53
11498
139
45.26
15756
72.97
17
85
903
136
125
0

குறிப்பாக துடுப்பாட்டகாரர்களுக்குச் சாதகமான இந்திய ஆடுகளங்களில் தன்னுடைய போட்டிகளில் அதிகமானவற்றை ஆடியுள்ள தெந்து;லகரை விட கரிசின் ஆட்ட சராசரி அதிகமாகவே உள்ளது. அது மட்டுமன்றி ஆரம்பத் துடு;பபாட்டக்காரராக ஒருநாள் போட்டிகளில் ஆடுபவர்களுக்கு அதிக ஓட்டங்களையும் அதிக ஆட்டச் சராசரியையும் பெறுவது இலகுவானது என்பது கிறிக்கெற் அரிச்சுவடி தெரிந்தவர்களுக்கே தெரியும் நிலையில் மத்திய கள வீரராக அதிகமான போட்டிகளில் ஆடியுள்ள காலிஸ் தெந்துல்கரை விஞ:சியிருப்பது தெந்துல்காரே சிறந்த வீரர் என்ற மாயையில் நாம் பல காலம் இருந்துள்ளதைத் தெளிவாக உணர்த்துகிறது.

டெஸ்ட் போட்டிகளைப் போலவே ஒரு நாள் களத்திலும் பந்து வீச்சிலும் அசத்தும் காலிஸ் 270 விக்கெற்றுகளைப் கைப்பற்றியுள்ள அதே நேரத்தில் சச்சின் கைப்பற்றியுள்ள விக்கெற்றுகளின் எண்ணிக்கை 154 மட்டுமே.

நான் இதுவரை கிறிக்கெற் களத்தி;ல அவதானித்த வகையிலும் புள்ளிவிபரங்களின் அடிப்படையிலும் காலிசே தெந்துல்கரை விட சிறந்த வீரர் என்றால் அதில் மிகையொன்றுமில்லை.

Complete statistics:
Kallis
Batting and fielding averages
MatInnsNORunsHSAveBFSR100504s6sCtSt
Tests162274401312822456.102848646.0844581469971940
ODIs321307531149813945.261575672.9717859031361250
T20Is252346667335.05558119.3505562070
First-class253415571953422454.5661972580
List A4173996514764155*44.20231081560
Twenty2013413021351789*32.263153111.5402634973420
Bowling averages
MatInnsBallsRunsWktsBBIBBMAveEconSR4w5w10
Tests1622671984293412886/549/9232.432.8268.8750
ODIs3212801063685582705/305/3031.694.8239.3220
T20Is2519276333124/154/1527.757.2323.0100
First-class25328643133384236/5431.532.7967.780
List A41713559106503485/305/3030.604.7138.9330
Twenty2013411521382742874/154/1531.517.6924.5100

SACHIN Statistics
Batting and fielding averages
MatInnsNORunsHSAveBFSR100504s6sCtSt
Tests1983273315837248*53.865167691150
ODIs4634524118426200*44.832136786.23499620161951400
T20Is110101010.001283.33002010
First-class3074865025228248*57.86811141860
List A5515385521999200*45.54601141750
Twenty209191112727100*34.082239121.7911635136280
Bowling averages
MatInnsBallsRunsWktsBBIBBMAveEconSR4w5w10
Tests19814241982461453/103/1454.683.5193.2000
ODIs463270805468501545/325/3244.485.1052.2420
T20Is11151211/121/1212.004.8015.0000
First-class30775634353703/1062.183.45108.000
List A5511023084782015/325/3242.174.9750.8420
Twenty209189312321/121/1261.507.9346.5000